Disqus Shortname

உத்தரமேரூர் நங்கையர்குளம் தூர்வாரப்படுமா?

உத்தரமேரூர் ஏப்ரல் 19

உத்திரமேரூர் நங்கையர் குளம், பராமரிப்பின்றி சீரழிந்து போவதை பாதுகாக்க, பேரூராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உத்தரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட 16-வார்டு வேடபாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது நங்கையர்குளம். இக்குளமானது சோழர் காலத்தில் கட்டப்பட்டது. சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் ஒதுக்கப்பட்டு அமைக்கப்பட்டது இக்குளமாகும். 

சிறப்பம்சம் 

 சோழர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான இந்த குளத்திற்கு என, பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.

சாபம் பெற்ற குளம் :   

இக்குளத்தில், அக்காலத்தில் தெய்வ அருள் பெற்ற பெண் ஒருவர் நீராடிக் கொண்டிருந்தபோது, அதை மறைந்திருந்து, அப்பகுதியினை சேர்ந்த சில ஆடவர்கள் பார்த்ததாகவும், கோபமுற்ற அந்த பெண், அந்த ஆடவர்களை சபித்ததாகவும், இதனால், இக்குளத்திற்கு சாபம் பெற்ற குளம் என, மற்றொரு பெயர் உள்ளது. 

இக்குளத்தில் மூழ்கி வேண்டுதல் செய்யும் பெண்களுக்கு, திருமணதடை நீங்கி வரன் அமையும் மற்றும் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம் ஆகும். 
மேலும் உத்தரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில்

உள்ள கோவில்களில் கும்பாபிஷகங்கள், மற்றும் தீமி விழாக்கள் சுப
நிகழ்விற்காக இக்குளத்தின் நீரை புனித நீராக பயன்படுத்துவருவது வழக்கம்,
இக்குளம் முழுமையானால் தாமரை, அள்ளி போன்ற பூக்கள் பூத்து ரம்யமாக
காட்சியளிக்கும். மேலும் உத்தரமேரூர் மற்றும் சுற்றியுள்ள பகுதி
மக்களுக்கு முக்கிய நீராதாரமாக கருதப்பட்டது இக்குளம். இது போன்று
இக்குளத்திற்கு பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளது. ஆனால் தற்போது இக்குளத்தை சுற்றி பல்வேறு நபர்கள் ஆக்கிரமிப்பினால் குளத்தின் பரப்பளவு குறைந்து குட்டை போல் காணப்படுகின்றது. இந்த குளத்திற்கு உத்தரமேரூர் ஏரியில்  இருந்து வெளியேறும்  உபரி  நீரினால் குளம் முழுமையடையும், ஆனால்  நீர்வரத்துக் கால்வாய் குப்பைகள் கொட்டப்பட்டு முழுயாக தூர்ந்து போய்  காணப்படுகிறது. இதனால் இக்குளம் முழுமையாக நிரம்பி பல வருடங்களாக ஆகிறது. இக்குளத்தை சுமார் 30வருடங்களுக்கு முன்பு தூர்வாரப்பட்டதாக  கூறப்படுகிறது. தற்போது தூர்ந்து போயும், செடி கொடிகள் வளர்ந்தும்  காணப்படுகிறது. எனவே பேரூராட்சி நிர்வாகம் இது போன்ற நீராதாரங்களை  அழிக்காமல் பேணிகாத்திட இக்குளத்தை தூர்வாரியும் நீர்வரத்து கால்வாய்களை  சீரமைத்தும் தரும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments