Disqus Shortname

உத்திரமேரூரில் அம்பேத்கர் 125–வது பிறந்த நாள்விழா

உத்திரமேரூர் ஏப்,15
உத்திரமேரூரில் டாக்டர் அம்பேத்கர் 125-வது பிறந்த நாள்விழா நேற்று மிக
சிறப்பாக கொண்டாடப்பட்டது.
 இந்திய குடியரசு
இதில் இந்திய குடியரசு கட்சியினர் சார்பில்
பெரியார் சிலை அருகில் ஊர்வலமாக புறப்பட்டு பஜார் வீதி வழியாக சென்று
டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு இந்திய குடியரசு கட்சி காஞ்சி மேற்கு மாவட்ட
செயலாளர் என்.சம்பத் தலைமை தாங்கி மாலை  அணிவித்தார். உத்திரமேரூர்
ஒன்றிய செயலாளர் என்.ஏ.தியாகராஜன், நகர தலைவர் எம்.மாணிக்கம், மாவட்ட துணைத்தலைவர் கே.எம்.கோபால் மாவட்ட இளைஞரணி செயலாளர் சதாசிவம், ஒன்றிய இளைஞரணி செயலாளர் டி.சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
 அதிமுக
உத்திரமேரூர் அதிமுகவினர் சார்பில் உத்திரமேரூர் எம்.எல்.ஏ வாலாஜாபாத்பா.கணேசன் தலைமை தாங்கி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து கழக நிர்வாகிகளுடன் மரியாதை செலுத்தினார். சேர்மென் கமலக்கண்ணன், அ.ரவிசங்கர், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாமலை, பிரகாஷ்பாபு, பொ.சசிகுமார் உட்பட அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
.
 இந்திய தேசிய காங்கிரஸ்
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் டாக்டர்
அம்பேத்கர் சிலைக்கு காஞ்சி தெற்கு மாவட்டம் பொறுப்பாளர் வழக்கறிஞர்
ஆர்.சுந்தரமூர்த்தி தலைமை தாங்கி மாலை அணிவித்தார். முன்னாள் மாவட்ட
அன்னை இந்திரா பேரவை மாநில தலைவர் எஸ்.எம்.உசேன் முன்னாள் உத்திரமேரூர் வட்டார துணைத்தலைவர் என்.காசி, உட்பட பலர் பங்கேற்றனர்.
 புரட்சி பாரதம்
புரட்சி பாரதம் கட்சி மாவட்ட அமைப்பு செயலாளர் விசூர் கன்னியப்பன் தலைமையில் மாவட்ட  செயலாளர் எஸ்.பி.சி.தனசேகரன் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் கிழக்கு ஒன்றிய செயலாளர் பு.தே.பாஸ்கர், நகர செயலாளர் பா.அப்பு உட்பட பலர் உள்ளனர்.

No comments