Disqus Shortname

உத்திரமேரூரில் விவசாயிகளுக்கு பசுந்தாள் எரு விதை வழங்கும் விழா

உத்திரமேரூர் ஏப்,28

உத்திரமேரூர் ஒன்றிய விவசாயிகளுக்கு பசுந்தாள் எரு விதை வழங்கும் விழா
நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் காஞ்சி மாவட்ட இயற்கை வேளாண்மை
விழிப்புணர்வு சங்க தலைவர் சேழனூர் மா.ஏழுமலை தலைமை தாங்கினார்.
செயற்குழு உறுப்பினர்கள் மு.பரசுராமன், மாயகிருஷ்ணன், ஆர்.வரதன்,
சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சி மாவட்ட வேளாண் வணிக
மற்றும் விற்பனைதுறை துணை இயக்குனர் ஆ.சந்துரு கலந்தக்கொண்டு
உத்திரமேரூர் ஒன்றியத்தில் 53 விவசாயிகளுக்கு தனது சொந்த செலவில்
பசுந்தாள் எரு விதையினை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் கூறுகையில்
அண்மைக்காலங்கலாக ரசாயண மருந்துகள், மற்றும் உரங்களை தெளித்து மண்ணின்
தரத்தையும், தன்மையையும் முற்றிலுமாக அழித்து, விவசாயம் அழிந்து வரும்
சூழல் ஏற்பட்டு வருகிறது. இதிலிருந்து விவசாயிகள் மற்றும் விவசாய
நிலங்களை காக்க வேண்டுமானால் நாம் அனைவரும் மீண்டும் இயற்கை விவசாயத்தை
நாட வேண்டும். அதற்கான எனது பங்களிப்பாக எனது ஆசான் இயற்கை வேளாண்
விஞ்ஞாணி நம்மாழ்வார், எனது பெற்றோர்கள் நினைவாக விவசாயிகளும் இந்த
பசுந்தாள் எரு விதைகளை வழங்குகிறேன் இந்த விதைகளை தொடர்ந்து பயிரிட்டு
இரசாயண உரங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில்
வேளாண்மை உதவி  அலுவலக மு.ஆறுமுகம், துணை வேளாண் அலவலர் ஆனந்தராஜ்,
வேளாண் உதவி அலுவலர் ராஜேந்திரன் மற்றும விவசாயிகள் கலந்துக்கொண்டனர்.

No comments