Disqus Shortname

திருப்புலிவனத்தில் பஞ்சமி நிலம் மீட்பு போராட்டம்

உத்திரமேரூர் ஏப்,08

உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் பகுதியில் பஞ்சமி நில மீட்பு
போராட்டம்  நடைபெற்றது. உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம்
பகுதியில் 1929-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தலித் மக்களுக்காகசுமார் 38 ஏக்கர் பரப்புளவு கொண்ட நிலத்தினை வழங்கப்பட்டதாகவும் அந்தநிலத்தை தற்போது தலித் மக்களிடமிருந்து சட்ட விரோதமாக பறிக்கப்பட்டுபல்வேறு நபர்கள் ஆக்கிரமிப்பு செய்தும் ரியல் எஸ்டேட்டாக மாற்றியும்வைத்துள்ளனர். இந்த நிலங்களை கைப்பற்றி நிலமற்ற தலித் மக்களுக்கு வழங்கிடவேண்டுமென்று தீண்டாண்மை ஒழிப்பு முன்னனி மற்றும் விவசாய சங்கம் இணைந்துநேற்று  பேராட்டத்தில் ஈடுப்பட்டது. இப்போராட்டத்திற்க்காக குவிந்த100-க்கு மேற்ப்பட்டோர் உத்திரமேரூர் காஞ்சிபுரம் சாலையில் இருந்துபஞ்சமி நிலத்தை நோக்கி கோஷமிட்டபடி நடந்து சென்றனர்.  அப்போது அங்கிருந்தகாவலர்கள் தடுப்பை மீறி சென்ற போராட்ட குழுவினர் அங்கிருந்த ரியல்எஸ்டேட்கற்கலை பெயர்த்தும் தங்களது சங்க கொடியினை நட்டனர். தகவல் அறிந்த
காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் சிவருத்ரய்யா, மதுராந்தகம் டி.எஸ்.பி.
இராஜேந்திரன், தாசில்தார் பேபிஇந்திரா, உத்திரமேரூர்  இன்ஸ்பெக்டர்
மணிமாறன் ஆகியோர் போராட்ட குழுவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படாததால் அதிகாரிகள் கலைந்துசென்றனர். இப்போராட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனி,தமிழ்நாடு விவசாயிகள்சங்கம், தமிழ்நாடு நில உரிமை கூட்டமைப்பு,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாதர் சங்கம், விடுதலை சிறுத்தைகள்  கட்சி  உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்

No comments