Disqus Shortname

இடையம்பூதூரில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

உத்திரமேரூர் ஏப்,22

உத்திரமேரூர் அடுத்த இடையம்பூதூர் கிராமத்தில் 200-வருடம் பழமை வாய்ந்த
கோவில் ஸ்ரீ.மாரியம்மன் கோவில். இக்கோவிலில் புணரமைக்கும் பணி கடந்த சில
மாதங்களாக நடைப்பெற்றது. பணி முடிந்து நேற்று கும்பாபிஷேகம் வெகு
விமரிசையாக நடைப்பெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 2 நாட்களும்
கணபதிபூஜை, தனபூஜை, வாஸ்துஹோமம், யாகசாலைபூஜை போன்ற பல்வேறு பூஜைகள்
நடைபெற்றது. இதை தொடந்து நேற்று காலை புனித நீர் கொண்டு வந்து கலசத்தின்
மீது புனித நீர்  ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
விழாவிற்கு இடையம்பூதூர் மற்றும் அதை சுற்றி உள்ள பல்வேறு கிராமத்தை
சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு அம்மனை வழிபட்டனர்.
விழாவிற்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாகுழுவின் தலைவர் திருவேங்கடம், ராணியம்மாள் தலைமையில் ஒன்றிய குழு
உறுப்பினர் வெடிஆனந்தன் பெருமாள், ராணி, தயாளன் மற்றும் விழாகுழுவினர்கள்
விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். பின்னர் உற்சவ
ஸ்ரீமாரியம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

No comments