Disqus Shortname

தூய்மை பாரத இயக்கப்பயிற்சி முகாம்

உத்திரமேரூர் ஏப்,23

உத்திரமேரூரில் தூய்மை பாரத இயக்கப் பயிற்சி முகாம் நேற்று நடைப்பெற்றது.
இப்பயிற்சி முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், பிரகாஷ்பாபு
ஆகியோர் தலைமை தாங்கினர். உதவி பொறியாளர் சபாநாயகம், மேலாளர் முருகேசன்
ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பயிற்சியில் 2019 க்குள் திறந்தவெளியில்
மலம் கழிக்கும் பழக்கம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கில்
உத்திரமேரூர் ஒன்றியத்தில் நடப்பு நிதியாடில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலர்கள், கிராம வறுமை
ஒழிப்பு சங்க உறுப்பினர்கள் சுகாதார சமூக வல்லுனர்கள் ஆகியோர்களுக்கு
அவர்களின் செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில்
திறந்த வெளி மலம் கழிப்பதால் ஏற்படும் பாதிப்புக்கள், கழிவறை உபயோகத்தால்
ஏற்படும் நன்மைகள், மேலும் மட்கும் குப்பை, மட்காத குப்பைகளை பிரித்து
பராமறித்தல், பொது இடங்களில் கடைப்பிடிக்கக் வேண்டிய சுகாதாரப்பழக்க
வழக்கங்கள் குறித்து விளக்கிக்கூறப்பட்டது. பயிற்சியாளர்கள் தூய்மை பாரத
இயக்கத்தின் வட்டார ஒருங்கினைப்பாளர் சுரேஷ், உதவி திட்ட மேலாளர் தினகர்
ஆகியோர் இப்பயிற்சியளித்தனர். மேலும் கழிப்பறை கட்டுமான மாதிரிகள், அதனை
கட்டும் முறைகள் குறித்த குரும்படங்கள் ஒளிபரப்பபட்டது.

No comments