Disqus Shortname

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முண்ணனி 2வது மாவட்ட மாநாடு மற்றும் பொதுக்கூட்டம்

உத்திரமேரூர் ஏப், 28
உத்திரமேரூரில் தமிழ்நாடு தீண்டாமை ஓழிப்பு முன்னணியின் காஞ்சி மாவட்ட
2வது மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது, மாநாட்டில்
தீண்டாமை ஒழிப்பிற்காக பாடுபட்டு உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி
செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின்
மாநில பொதுச் செயலாளர் கா.சாமுவேல்ராஜ் தலைமை தாங்கினார். விடுதலை
சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் தி.வ.எழிலரசு, ஒன்றிய
செயலாளர் ராபட், புரட்சி பாரத ஒன்றிய செயலாளர் அப்பு,இந்திய குடியரசு
கட்சி சுரேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி
மாநில துணைத் தலைவர் நிக்கோலஸ் துவக்கவுரையாற்றினார். தீண்டாமை ஓழிப்பு
முன்னணி பாரதிஅண்ணா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்
சூ.க.விடுதலைசெழியன், சி.பி.எம் மாவட்ட செயலாளர் சங்கர், தயாளன், ஜெயந்தி
உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் உள்ள
பஞ்சமி நிலங்களை மீட்டு நிலமற்ற தலீத் இன மக்களுக்கு வழங்குதல், கௌரவ
கொலைகளுக்கு உடனடியாக சட்டத்திருத்தம் செய்தல், மத்திய அரசின் நிலம்
கையக்ப்படுத்தும் மசோதாவை திரும்ப பெற வேண்டும், தலீத் மாணவர்களுக்கு
அரசாணை 92ன் படி கல்லூரி கட்டணங்களை முழுமையாக அரசே ஏற்றுக்கொள்ள
வேண்டும், உள்ளளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதை
தொடர்ந்து உத்திரமேரூர் பேரூந்து நிலையத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஓழிப்பு
முன்னணியின் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது. நிர்வாகிகள் மற்றும்
பொருப்பாளர்கள் கருததுரை வழங்கினார்கள்.

No comments