Disqus Shortname

உத்திரமேரூர் ஏப்,16

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த பழையசீவரம் பகுதியில் உள்ளதுபத்மாதேவி தனியார் சர்க்கரை ஆலை. இந்த ஆலையின் அலுவலகம் உத்திரமேரூர்நூக்காலம்மன் கோவில் தெருவில் செயல்பட்டு வருகின்றது. இந்த அலுவலகத்தில்உத்திரமேரூர் சுற்றியுள்ள திருப்புலிவனம், மருதம், கருவேப்பம்பூண்டி,கம்மாளம்பூண்டி, காரியமங்கலம் உள்ளிட்ட 50-ற்க்கும் மேற்பட்டகிராமங்களில் உள்ள கரும்பு விவசாயிகள் ஒப்பந்த அடிப்படையில் தாங்கள்சாகுபடி செய்த கரும்பினை சர்க்கரை ஆலைக்கு அனுப்புகின்றனர். ஆலையின்நிர்வாகம் கரும்பு டன் ஒன்றுக்கு ரூபாய் 2550 வழங்க வேண்டும் ஆனால் கடந்த6 மாதங்களுக்கு முன் போடப்பட்ட கரும்பிற்கு 500 ரூபாய் மட்டும்கொடுத்துவிட்டு மீத தொகையினை கொடுக்காமல் விவசாயிகளை அலக்கழிக்கின்றனர்.இதனால் ஆதிதிரமடைந்த கரும்பு விவசாயிகள் 100-க்கு மேற்பட்டோர் நேற்றுஉத்திரமேரூரில் உள்ள அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அலுவலகத்திறகுஊழியர்கள் யாரும் வராத நிலையில் வெளியே உள்ள கதவினை பூட்டு போட்டுமுற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தகவலறிந்த நிர்வாகத்தினர் சம்பவஇடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஏப்ரல்கடைசி வாரத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் நிலுவைத்தொகையினை முழுவதுமாகவழங்கி விடுவதாக கூறியதன் பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர். இதுகுறித்து விவசாயி கூறுகையில் எங்களுக்கு டன் ஒன்றுக்கு கொடுக்கப்படும்விலையே குறைவு அதையும் இந்த நிர்வாகம் முறையாக வழங்காமல் விவசாயிகளைஏமாற்றி வருகிறது. நாங்கள் விட்டில் உள்ள நகைகள் உள்ளிட்டவைகளை அடகுவைத்து இரவு பகலாக விவசாயம் செய்து பயிரிட்ட விளைச்சலை தருகிறோம். ஆனால்விவசாயிகளின் நிலையை சர்க்கரை ஆலை நிர்வாகம் பொருட்படுத்த வில்லை. இதனால்எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. தற்போது குறிப்பிட்டுள்ளநேரத்தில் பணத்தினை வழங்காவிட்டால் எங்களது போராட்டம் மாவட்ட அளவில்நடைப்பெறும் என்று கூறினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்புஏற்பட்டது.--

No comments