Disqus Shortname

உத்திரமேரூர் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு

உத்திரமேரூர் செப்,24
உத்திரமேரூர் வட்டத்திற்குட்பட்ட 100 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பு நேற்று உத்தரமேரூர்  அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்றது. உத்தரமேரூர் வட்டாட்சியர் வீ.இரவி தலைமையில் தேர்தல் துணை வட்டாட்சியர் எஸ்.சுந்தரராஜன் முன்னிலையில் பயிற்சி வகுப்பு நடந்தது. இப்பயிற்சியில் 01.01,2015 அன்று 18 வயது பூர்த்தி அடைந்த வாக்காளர்களின் பெயர்களை சேர்த்தல், இறந்தவர்கள் பெயர்களை நீக்குதல், திருமணமானவர்கள் புதிய வாக்காளர் மற்றும் வாக்காளர் பட்டியல்களை சரிப்பார்த்தல் போன்ற பணிகள் தொடர்பாக விளக்கமான பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. மேற்படி பயிற்சி வகுப்பில் 100 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அலவலர்களும் பங்கு பெற்றனர்.

No comments