Disqus Shortname

ஸ்ரீ சொக்கம்மன் கோவிலில் தேர் திருவிழா


உத்தரமேரூர் செப். 11
உத்தரமேரூர் அடுத்த சாலவாக்கத்தில் 1000 ஆண்டு பழமைவாய்ந்த கோவில் ஸ்ரீ சொக்கம்மன் கோவில். இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி, ஆவணி மாதங்களில் 10 நாள்கள் திருவிழா நடைப்பெறும். இவ்வாண்டு திருவிழவானது 2 ஆம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கி கடந்த 9 நாட்களும் அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி, லட்சுமி, காளி, சரஸ்வதி, அண்ணபூரணி, போன்ற விதவிதமாக அலங்காரம் செய்து பொது மக்களுக்கு வழிபட்டனர். இந்த ஆண்டு இக்கோவிலுக்கு 10 லட்சம் மதிப்பிலான தேர் புதிதாக செய்து முதலாம் ஆண்டாக நேற்று அலங்கரிக்கப்பட்ட அம்மன் தேர்மீதேரி திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இவ்விழா தொடங்கிய நாள் முதல் 3 வேலையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சந்திரன் மற்றும் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். ஜாதி மத பேதமின்றி நடைப்பெற்ற இவ்விழாவில் ஆயிரக்கனக்காக பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.  

No comments