Disqus Shortname

உத்திரமேரூர் பேரூராட்சி சார்பில் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம்

உத்திரமேரூர் செப், 02 

உத்திரமேரூர் பேரூராட்சி சார்பில் உத்திரமேரூர் வியாபாரிகளுக்கு 
திடக்கழிவு மேலாண்மை திட்டம், பிளாஸ்டிக் பயன்பாடு தடை, மழைநீர் 
சேகரிப்புத் திட்டம் போன்றவற்றைப் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் 
உத்தரமேரூரில் நேற்று நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் மக்கும் குப்பை, 
மக்காத குப்பை என தரம் பிரித்து வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் 
பேரூராட்சி சுகாதார பணியாளர்களிடம் வழங்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை எரிக்கக்கூடாது, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் மழை நீர் சேகரிப்பு தொட்டி அனைத்து வீடுகள் மற்றும் கடைகளிலும் கட்டயாமாக அமைத்திட வேண்டும் திறந்த வெளியில் மலம், ஜலம் கழிப்பதை முற்றிலுமாக தவிர்க்க அனைத்து வீடுகளிளும் தனி நபர் கழிப்பிடம் கட்டாயம் அமைத்திட வேண்டும் போன்றவற்றை பற்றி வியாபாரிகளிடம் செயல் அலுவலர் கமல்ராஜ் விளக்கி பேசினார். இக்கூட்டத்தில் உத்தரமேரூர் பேரூராட்சி மன்ற தலைவர் சுமதிகுணசேகரன் தலைமை தாங்கினார். உத்திரமேரூர் வியாபாரிகள் சங்க தலைவர் ரமேஷ் நுகர்வோர் சங்க தலைவர் வரதன் மற்றும் வியாபாரிகள் கலந்துக் கொண்டனர்.

No comments