Disqus Shortname

வணிகர்களுக்கு மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் தரம் பிரித்து வழங்க கூடைகள் வழங்கப்பட்டது

உத்திரமேரூர் செப், 26
உத்திரமேரூர் பேரூராட்சியில் வணிக நிறுவனங்களுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ்  மக்கும் குப்பைகள், மக்காகாத குப்பைகள் தரம் பிரித்து வழங்க கூடைகள் வழங்கப்பட்டது. குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க கடந்த செப்டம்பர் 1-ம் தேதி வணிகர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் 25-ம் தேதி வியாழக்கிழமை வரை கால அவகாசம் கேட்டதற்கிணங்கவும் 26-ம் தேதி நேற்று வியாபாரிகள் சங்க தலைவர் டி.ரமேஷ் முன்னிலையில்  80 கடைகளுக்கு கூடைகள் வழங்கப்பட்டது. பேரூராட்சி தலைவர் சுமதிகுணசேகரன் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி மன்ற
ஊழியர்கள் பங்கேற்றனர். செயலர் அலுவர் த.ந.கமல்ராஜ் பேசியது.
சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டியது அவசியம். எனவே
பொதுமக்களின் நலன் கருதி பேரூராட்சி நிர்வாகத்தில் மேற்கொள்ளப்படும்
திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளுக்கு பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குறிப்பாக வீட்டு குப்பைகளை வீதியில் வீசாமல் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதில் துணி, காகிதம் மற்றும் சணல் பைகளையும் தொண்ணை, காகிதங்களை பயன்படுத்துங்கள் என்று கூறினார்.

No comments