Disqus Shortname

உத்தரமேரூரில் சோழா அரிமா சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா

உத்தரமேரூர் செப்,16
உத்தரமேரூர் சோழா அரிமா சங்கத்தினர் பன்னாட்டு அரிமா சங்கம் சார்பில்
நேற்று ஆசிரியர் தினவிழா கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் தனியார் பள்ளி
ஆசிரியர்-ஆசிரியைகளுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டது. விழாவில் உத்தரமேரூர் அரிமா சங்க தலைவர் சங்கரன் தலைமை தாங்கினார். பொருளாளர் ஆறுமுகம் வரவேற்றார். முன்னாள் மாவட்ட ஆளுநர் எஸ்.மகேஷ் தனியார் பள்ளியில் பணிபுரிந்த 8 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி வாழ்த்தி பேசினார். இவ்விழாவில் தளவராம்பூண்டி தொடக்கப்பள்ளிக்கு அரிமாசங்கம் சார்பில் மேற்கூரைக்கு  தார்பாய்கள், மாணவர்களுக்கு தட்டு, டம்ளர், அடையாள அட்டை ஆகியவைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மண்டல
நிர்வாகிகள் சிறப்புரையாற்றினார்கள். முடிவில் அரசு வழக்கறிஞர் எம்.மணி
நன்றி கூறினார்.
தலைவர் கமல்கிஷோர் சோழா அரிமா சங்க செயலாளர் ஆர்.நீலகண்டன் மற்றும்

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.