Disqus Shortname

உத்திரமேரூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 462 சைக்கிள் வழங்கும் விழா

உத்திரமேரூர் செப்,23
உத்திரமேரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 279 மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கிள்களும், உத்தரமேரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 183 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களும்  உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கி வழங்கினார். மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு தலைமையாசிரியர் எம்.கே.தியாகராஜன் அனைவரையும் வரவேற்றார். ஒன்றிய குழு தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் வி.ஆர்.அண்ணாமலை முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியை கோ.சு.ஜெயரூபி நன்றி கூறினார். உத்தரமேரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் பொ.சசிக்குமார் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு, மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் கே.ஆர்.தருமன், பேரூராட்சி துணத்தலைவர் இ.தயாளன் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.இரவி வரவேற்றார். உதவித்தலைமை ஆசிரியர் ந.பாலமுருகன் நன்றி கூறினார். 

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.