Disqus Shortname

சட்ட விழிப்புணர்வு முகாம்.

உத்திரமேரூர் செப், 26

உத்தரமேரூர் அடுத்த எல்.எண்டத்தூரில் வட்ட சட்டப் பணிகள் குழு
சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில்
ஊராட்சி மன்றத் தலைவர் முனியம்மாள்  தலைமை தாங்கினார். உத்தரமேரூர்
குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்ற நீதிபதி எம்.ஜெய்சங்கர் முன்னிலை
வகித்து சிறப்புரையாற்றினார்.  இதில்  பெண்களுக்கான உரிமைகள் மற்றும்
கடமைகள், கல்வி சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், கட்டாயக் கல்வி, அரசின் நல
திட்டங்கள் பெறுவது அமைப்புசாரா தொழில்கள் போன்றவற்றை பற்றி விளக்கி பேசினார். முடிவில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது கிராம மக்கள் எல்.எண்டத்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய வசதி இல்லை என்றும் நிறந்தர மருத்துவர் நியமிக்கவும் 108 வாகனம் தேவை போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். உடனே நீதிபதி அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்தார். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பரிந்துரை செய்வதாக கூறினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் இரவி, உத்தரமேரூர் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கருணாநிதி வழக்கறிஞர்கள் மற்றும் கிராமமக்கள் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள் குழுவின் மூத்த நிர்வாகி இராமலிங்கம்
சிறப்பாக செய்திருந்தார்.

No comments