Disqus Shortname

திறந்தவெளி கிணற்றுக்கு மூடி அமைக்க கோரிக்கை

  உத்திரமேரூர் ஆக, 10

உத்திரமேரூர் அடுத்த எடமச்சி கிராமத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட
மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள அங்கன்வாடி மையத்திற்கு அருகில்  ஊராட்சி சொந்தமான திறந்தவெளிக்கிணறு உள்ளது. சுமார் 15 வருடங்களுக்கு  முன்பு வரை இந்த கிணறு கிராம மக்கள் குடிநீர் ஆதரமாக விளங்கியது.இந்நிலையில் தெருக்களில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்து வீடுதோரும்  குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகப்படுத்தப்படுகிறது. இதனால் கிராம  மக்களுக்கு குடிநீர் தந்த கிணறு முறையாக பராமரிக்கபடவில்லை. இதனால்  கிணற்றிலுள்ள தண்ணீர் மாசடைந்து காணப்படுகிறது. மேலும் இந்த கிணறு திறந்த நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த கிணறு அருகில் கடந்த 5 ஆண்டுக்கு  முன்பு அங்கன்வாடி மையம் துவங்கப்பட்டு அங்கு 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர். இதனால் அங்கன்வாடி மையத்திற்கு வரும் பெற்றோர்கள் தங்களது  குழந்தைகளை மையத்திற்கு அனுப்ப தயக்கம் காட்டுகின்றனர். மேலும் இந்த கிணற்று நீரை வெகு நாட்களாக பயன்படுத்தாமல் உள்ளதால் இதில் உள்ள தண்ணீர்  மாசடைந்து காணப்படுவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே இந்த  திறந்த வெளி கிணற்றிற்கு மூடி அமைத்து தர வேண்டும். தண்ணீர் பாழாகாமளிருக்க கிணற்று நீரை சாலையோர மரங்கள் பயன்பெற செய்ய ஏற்பாடு  செய்ய வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments