Disqus Shortname

ஆந்திர மாநிலத்தில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணையை அகற்றக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

 ஆந்திர மாநிலம், புல்லூரில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையை அகற்ற வலியுறுத்தி உத்தரமேரூர் சாலவாக்கத்தில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்.
உத்திரமேரூர் ஆக, 05       
ஆந்திர மாநிலம் புல்லூரில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு கட்டியுள்ள தடுப்பணையை அகற்ற வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதி தலைமை வகித்தார். மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தலைமை பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் .மகேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் சங்கர், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் பு.பெ.கலைவடிவன், தொகுதிச் செயலாளர் பாசறை செல்வராஜி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணை செயலாளர் பி.வி.சீனுவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேப் போல் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கத்தில் நடத்த ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக விவசாய அணி மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கம்யூனிஸ்ட் நிர்வாகி பாஸ்கரன், நீர் உரிமை பாதுகாப்பு இயக்க தலைவர் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் பு.பெ.கலைவடிவன், தொகுதி செயலாளர் எழிலரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் சங்கர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் மோகனன் உட்பட விவசாயி அணி நிர்வாகிகள் உட்பட பலர் கண்டன உரையாற்றினர். இதில் ஆந்திர மாநிலம் புல்லூரில் தன்னிச்சையாக 12 அடி உயரத்துக்கு கட்டப்பட்டுள்ள தடுப்பணையால் தமிழகத்தில் குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றுப் படுகையின் நீர்வளம் வற்றிவிடும். தமிழகத்தில் பாலாற்றின் இரு கரையோரங்களிலும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயம் நடைபெறுகிறது. ஆந்திர அரசின் இந்த நடவடிக்கையால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பறிபோகும் அபாயம் ஏற்படும். எனவே, அணையை 12 அடி உயர்த்திக் கட்டியதை தகர்த்திட உத்தரவிடவேண்டும், இதனை கண்காணிக்கத் தவறிய அரசு துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாலாற்று படுகையில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், ஆப்பாட்டத்தில் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

No comments