Disqus Shortname

உத்திரமேரூரில் நாளை குடும்ப அட்டைதாரர் குறைதீர் கூட்டம்

உத்திரமேரூர்  ஆக, 12 :
 காஞ்சிபுரம் மாவட்டம்   உத்திரமேரூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கம், களியாம்பூண்டியில்    குடும்ப அட்டைதாரர் குறை தீர்க்கும் கூட்டம்  நாளை (13-08-2016) நடைபெறுகிறது.

குடும்ப அட்டையில் மாற்றங்கள் மற்றும் பொதுவிநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்ட முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, காஞ்சிபுரம் மாவட்டத்தில்  உத்திரமேரூர்  வட்டத்தில்  உள்ள  குடும்ப அட்டைதாரர்களின் குறைகளைக் கேட்டு தீர்வு காணும் பொருட்டு  தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கம், களியாம்பூண்டியி   மையத்தில்  ஆகஸ்டு, 2016 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் கூட்ட முகாம் 13.08.2016 அன்று காலை 10.00 மணிக்கு நடத்தப்படவுள்ளது.
 
இதில் வருவாய் துறையில் பணிபுரியும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை பிரிவில் பணிபுரியும் அலுவலர்கள் கூட்டுறவுத் துறையில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

அப்பகுதியைச் சுற்றி உள்ள குடும்ப அட்டைதாரர்கள் குடும்ப அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் பொதுவிநியோகத் திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் பொது விநியோகத் திட்ட பொருட்கள் கிடைப்பது குறித்தும் தனியார் துறையில் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகள் வாங்கும் நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவது அல்லது குறைகள் இருப்பது குறித்தும் அவர்களுக்கு குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை இக்கூட்டத்தில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 உத்திரமேரூர்  வட்டங்களில் உள்ள பகுதிகளில் குடும்ப அட்டைதாரார்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி, கேட்டு கொண்டுள்ளார்

No comments