Disqus Shortname

கட்டியாம்பந்தலில் இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம்

உத்திரமேரூர் ஆக, 08

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த கட்டியாம்பந்தல் கிராமத்தில் சங்கர நேத்ராலயா, ஆக்ஷன் ஆப் லவ் டிரஸ்ட் இணைந்து சிறப்பு கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா தலைமை தாங்கினார். சங்கர நேத்ராலயா, மருததுவர்கள் கண்ணன், முருகபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கட்டியாம்பந்தல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 547 பேர் சிகிச்சை பெற்றனர்.
இம்முாகமில் சங்கர நேத்ராலயா மருத்துவமனையிலிருந்து கண் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்தனர். மேலும் முகாமில் இருதயநோய், சிறுநீரகநோய், எலும்பு, காது, மூக்கு, தொண்டை பெண்கள் சிறப்பு பிரிவு, பொது மருத்துவம், குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை உட்பட பல்வேறு வகைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு தேவையான மருந்து
மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் கண் அறுவை சிகிச்சைக்கான 27 பேர் பரிந்துரை செய்யப்பட்டனர். மேலும் கண் குறைபாடு உள்ளவர்களுக்கு கண்ணாடிகள் வழங்க பரிந்துரை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு மருததுவர்கள் செவிலியர்கள் மருத்துவ குழுவினர்கள் பொது மக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

No comments