Disqus Shortname

வனத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள்.

த்திரமேரூர் ஆக, 07 
காஞ்சிபுரம் மாவட்டம் த்திரமேரூர் அடுத்த தளவராம்பூண்டி கிராமத்தில் சாலை பணிகளை தடுத்து நிறுத்தியவனத்துறை அதிகாரிகளை கிராமமக்கள் முற்றுகையிட்டு மறியல் செய்ததால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.உத்திரமேரூர் அடுத்த தளவராம்பூண்டி கிராமத்தில் சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். உத்திரமேரூர்-செங்கல்பட்டு சாலையிலிருந்து தளவராம்பூண்டி கிராமத்திற்கு செல்ல சுமார் 5 கிமீ தூரமுள்ள சாலை உள்ளது. வெகு நாட்களாக சிதலமடைந்த சாலையை சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துவந்ததன் பேரில் கடந்த ஆண்டுரூ .64 லட்சம் ஒதுக்கப்பட்டு சாலையை சீரமைக்கும் பணி தொடங்கியது. அப்போது சாலையின் நடுவே, சுமார் 1 கிமீதொலைவிற்கு தளவராம்பூண்டி வனப்பகுதிக்கு சொந்தமான இடம் என்று கூறி வனத்துறையினர் சாலை அமைக்கஎதிர்ப்பு தெரிவித்து பணிகளை தடுத்து நிறுத்தினர். வனத்துறையினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த ஒரு கி.மீ மட்டும் விட்டு விட்டு மற்ற இடங்களில் சாலை அமைக்கும் பணி நடந்து முடிந்தது. இந்த சாலைக்கு நடுவே உள்ள இடத்தையும் முறையாக சாலை அமைத்து தர வேண்டும் என்று கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் சாலையை அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்ததாககூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று குறிப்பிட்ட சாலையை அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பணியை தடுத்தி நிறுத்தினர். இதனால்ஆத்திரமடைந்த கிராமமக்கள் வனத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு அவர்களை சரமாரி கேள்வி எழுப்பி சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து உத்திரமேரூர் பேலீசார் மற்றும் தாசில்தார் சாந்தி, மதுராந்தகம் டிஎஸ்பிசிவசங்கரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியல் செய்த கிராமமக்களுடன் பேச்சு வார்த்தைநடத்தினர். இதில் அடுத்த இரண்டு நாட்களுக்குள் சாலை அமைக்க ஏற்ப்பாடு செய்யப்படும் என்ற கூறியதன் பேரின் பொது மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments