Disqus Shortname

அழிசூரில் திரௌபதை அம்மன் ஆலய 501 பால்குட ஊர்வலம்

உத்திரமேரூர், ஆக, 16

உத்திரமேரூர் அடுத்த அழிசூர் கிராமத்தில் சுமார் 500 ஆண்டு பழமை வாய்ந்த
ஆலயம் திரௌபதை அம்மன் ஆலயம். இந்த ஆலயத்தில் ஆடி மாத 3 நாள் திருவிழா கடந்த ஞாயிறன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. துவங்கிய நாள் முதல் கோவில் வளாகத்தில் மகாபாரத செற்ப்பொழிவு நடைப்பெற்றது. தினமும் திரௌபதை அம்மன் அலங்கரிக்கப்பட்டு கிராப்புறங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதையடுத்து நேற்று விரதமிருந்த பக்தர்கள் அழிசூர் குளக்கரையிலிருந்து காப்பு கட்டி பால்குடங்களுடன் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க கோவிலை வந்தடைந்தனர். பின்னர் பக்தர்கள் தங்கள் சிறங்களால் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். விழாவிற்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்ப்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய  கவுன்சீலர் வி.கன்னியப்பன், வீரராகவன், சம்பத், குமார் உட்பட விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர். விழாவையொட்டி அழிசூர் மற்றும் அருகில் உள்ள கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

No comments