Disqus Shortname

நடுத்தெரு ஸ்ரீ.மாரியம்மன் ஆலய 501 பால் குட ஊர்வலம்

           உத்திரமேரூர் நடுத்தெரு ஸ்ரீ.மாரியம்மனுக்கு பால் குடம் ஏந்திச் செல்லும்
பக்தர்கள்.
உத்திரமேரூர் ஆக, 05
உத்திரமேரூர் பஜார் வீதியில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த கோவில் நடுத்தெரு  ஸ்ரீ.மாரியம்மன் கோவில். இக் கோவிலில் ஆடி மாதம் துவங்கிய நாள் முதல் தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் நடப்பது வழக்கும். இங்கு கடந்த 17 முதல் 27 ஆம் தேதி வரை 10 நாட்கள் கூழ்வார்த்தல் திருவிழா உத்திரமேரூர் மற்றும்
அதை சுற்றியுள்ள 18 கிராமங்களிலும் வெகு விமரிசையாக நடந்தது. அதன் பின் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரம் ஆராதனையிட்டு பக்தர்கள் வழிபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று அம்மனுக்கு 501 பால் குட அபிஷேகம் சிறப்பாக நடந்தது. முன்னதாக முத்து பிள்ளையார் கோவிலிலிருந்து புறப்பட்ட பால் குட ஊர்வலம் தார தப்பட்டை முழங்க பஜார் வீதி வழியாக ஊர்வலமாக வந்து விரதமிருந்த பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். நிகழ்ச்சிகான ஏற்ப்பாடுகளை விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.


No comments