Disqus Shortname

ஸ்ரீ மல்லிகாதீஸ்வர ஸ்வாமி திருகோவில் கும்பாபிஷேகம்

உத்தரமேரூர்ஜீலை,11
உத்தரமேரூர் அடுத்த கரும்பாக்கம் கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமை
வாய்ந்த பிரசித்தி பெற்ற கோவில் ஸ்ரீபிரம்ம காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ
மல்லிகாதீஸ்வர ஸ்வாமி திருகோவில். இக்கோவில் உள்ள மல்லிகாதீஸ்வரரை வணங்கினால் காசி விஸ்வநாதரை வணங்கிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம் மேலும் ஸ்வாமியை வழிப்பட்டால் சகல காரியங்களும் நிறைவேறும். இக்கோவில் கடந்த சிலவருடங்களாக கோபுரம் கட்டும் பணி நடைப்பெற்றிருந்தது. அது தற்போது முடிந்து நேற்று காலை மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை யொட்டி கடந்த மூன்று நாட்களாக விக்னேஸ்வரபூஜை, கணபதிஹோமம், கோபுபூஜை, வாஸ்துசாந்தி, பிரவேசபலி, யாகசாலைபூஜை,  போன்ற பல்வேறு பூஜைகள் நடந்தது.  நேற்று புனித கலச நீரால் கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு பின்பு கிராம மக்களுக்கு புனித நீர் தெலிக்கப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திருவாடுதுறை ஆதீனம் இளைய சன்னிதானம் காசிவிஸ்வநாத தேசிக பரமாச்சார்ய சுமாமிகள், காஞ்சி தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம், ஆய்வாளர் சௌந்தரராஜன், மதுராந்தகம் துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன்,
மற்றும் நடராஜன், ராமலிங்கம், கிருஷ்ணமூர்த்தி, விஜயகுமார், ஆறுமுகம்
ஜீவானந்த் மற்றும் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவினை கிராமப்பொது மக்கள் மற்றும் விழாக்குழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ மல்லிகாதீஸ்வர ஸ்வாமியை வழிபட்டனர். இவ்விழாவில் பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இரவு அலங்கரிக்கப்பட்டரதத்தில் ஸ்வாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு
காட்சியளித்தார்.

No comments