Disqus Shortname

உத்தரமேரூரில் மாற்றுதிறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

உத்தரமேரூர் ஜீலை -9
உத்தரமேரூரில் நேற்று சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு பயனாளிகள் தேர்வு செய்யும் சிறப்பு முகாம் உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றிய முன் மாதிரி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.  உத்தரமேரூர் ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன் வரவேற்றார். மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலர் ஜேஸ்மின் முன்னிலை வகித்தார்.  உத்தரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளும்
பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினார். இம்முகாமில்
பயனாளிகளுக்கு சக்கரநாற்காலி 3, 2 மோட்டார் பொறுத்திய தையல் இயந்திரம், 8 இலவச பேருந்து பயணச்சலுகை, 10 மூன்று சக்கர வண்டி, 105 காதொலி கருவி, 2 ஊன்றுகோல் கட்டை, 7 செயற்கை கால், 3 மோட்டார் பொறுத்திய மூன்று சக்கரவண்டி, 3 முடநீக்கல் சாதனம், 8 நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகை, 7 நபர்களுக்கு கல்வி உதவித்தொகை, 60 நபர்களுக்கு ஊனமுற்றோர் உதவித்தொகை, 10 நபர்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு, 40 நபர்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலமாக வங்கி கடன் பெற பரிந்துரைசெய்யப்பட்டது.  முகாமில் கலந்து கொண்ட மொத்த பயனாளிகள் 450 தேசிய அடையாள அட்டை பெற்றோர்கள் 87, இம்முகாமில் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் செ.மணிமாறன், வட்டாட்சியர் வி.ரவி மாவட்ட புதுவாழ்வு திட்ட மேலாளர் பி.தனசேகரன், உத்தரமேரூர் ஒன்றிய செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு,   உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments