Disqus Shortname

5 வயதிற்க்குட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கை தடுக்க பயிற்சி முகாம்

உத்தரமேரூர் ஜீலை,28
உத்தரமேரூர் அடுத்த மானாம்பதி சமுதாய சுகாதார நிலையத்தில் பொது சுகாதார மற்றும் நோய்தடுப்புத் துறையின் சார்பில் 5 வயதிற்கு உட்பட்ட
குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கினை தடுக்க தீவிர பயிற்சி முகாம் நேற்று
நடைப்பெற்றது. 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கினால் ஏற்பட்டு உயிர் இழப்பை தடுக்க இப்பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமிற்கு சுகாதாரப் பணிகள் அலுவலக நேர்முக உதவியாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் ஆர்.உமாதேவி, அரசு மருத்துவர் ரெனீஷ் பயிற்சியினை அளித்தனர். பயிற்சியில் மருத்துவ அலுவலர்கள், 39 கிராமப்புற சுகாதாரப் பணியாளர்கள், 52 அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். உத்தரமேரூர் மற்றும் அதைசுற்றியுள்ள கிராமங்கள் அனைத்திலும் கிராமப்புற சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஆகஸ்ட்
8-ம் தேதி முதல் 2 வாரத்திற்கு 5 வயத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு
ஏற்படும் வயிற்றுப் போக்கை எவ்வாறு தடுப்பது என்பது பற்றி கிராமப்புர
மக்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். மேலும்  வயிற்றுப் போக்கை வராமல்
தடுக்க வாய்வழிகரைசல், மாத்திரைகள் அளிக்கப்படும். என்றும் மருத்துவ
அலுவலர்கள் கூறினார்கள்.

No comments