Disqus Shortname

உத்திரமேரூர் பஸ் நிலையத்துக்குள் வராத அரசு பஸ்கள்

உத்திரமேரூர் ஜீலை 15,
உத்தரமேருரில் இருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வந்தவாசி,
மதுராந்தகம், சென்னை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு அலுவலகம்பணிக்கும், கல்லூரி, பள்ளி, மருத்துவமனை போன்ற பல்வேறு இடங்களுக்கு செல்லும் உத்தரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் உத்தரமேரூர் பேரூந்து நிலையத்திற்கு வந்து அங்கிருந்து தாங்கள் போக வேண்டிய இடங்களுக்கு செல்லுகின்றனர். இந்நிலையில் உத்தரமேரூர் பேரூந்து நிலையத்தில் சுமார் ரூபாய் 2.85 லட்சம் கால்வாய் கட்டும் பணி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து நிர்வாகம் உத்தரமேரூர் பேரூந்து நிலையத்திற்கு வரும்  அரசு பேரூந்துக்களை எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி சுமார் 400 மீட்டர் தொலைவில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தி மீண்டும் அங்கிருந்தே இயக்குகின்றனர். இதனால் பேரூந்து நிலையத்தில் பேரூந்திற்காக காத்திருக்கும் பயணிகள் ஏமாற்றத்துடன் வெகு நேரம் காத்துக்கிடக்கும் அவல நிலை உருவாகியுள்ளது. மேலும் பேரூந்து எந்த இடத்தில் நிற்கும் என்பது தெறியாமல் பொது மக்கள் அங்கும் இங்குமாக அலக்கழிக்கின்றனர். பள்ளி. கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர்கள் பள்ளி, கல்லூரிக்கு செல்வதில் காலதாமதம் ஏற்படுகிறது மேலும் கர்பிணிப்பெண்கள் முதியவர்கள் வெகு தூரம் நடந்து சென்று பேரூந்தை பிடிக்கவுள்ளதால் அவர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதனால் அவரவர்கள் தகுந்த நேரத்தில் தகுந்த இடத்திற்கு செல்ல முடியாமல் பெரிதும் சிறமப்படுகின்றனர். எனவே பொது மக்களின் நலன் கருதி கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்கவும் அனைத்து போருந்துகளையும் பேரூந்து நிலையத்தில் இருந்து இயக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments