Disqus Shortname

இளநகரில் காய்ச்சல் மருத்துவ குழு விரைவு

உத்தரமேரூர் ஜீலை 14
உத்தரமேரூரை அடுத்த இளநகர் கிராமத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்ட
மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கய்ச்சலால்
பாதிக்கப்பட்ட ஒருவர் களியாம்பூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற்றார். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் காய்ச்சலால்
பாதிக்கப்பட்ட 5 பேர் களியாம்பூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு
சிகிச்சைக்காக சென்றனர். தகவலரிந்த காஞ்சி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் கே.கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் மாவட்ட கொள்ளை நோய் அலுவலர் ஷண்முகவள்ளி, மானாமதி வட்டார மருத்துவ அலுவலர் ஆர்.உமாதேவி களியாம்பூண்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முனிராஜ் தலைமையிலான மருத்துவ குழவினர் இளநகர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாவதிபார்திபன்  நேற்று முகாமிட்டு கிராமத்தில் உள்ள அனைத்து மக்களுக்கு தடுப்பு மாத்திரைகளும் மருந்துகளும் வழங்கினர். மேலும் கிராமம் முழவதும் கொசு பரவாமல் இருக்க மருத்துவ குழுவின் சார்பில் கொசு மருந்து தெளிக்கப்பட்டு கிராமகளில் உள்ள

அணைத்து பகுதியிலும் சுகாதாரப்பணிகள் மேற் கொள்ளப்பட்டன. நேற்று கிராமம்
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தண்ணீர் தேங்கக்கூடிய
டயர்கள், பழைய பிளாஸ்டிக் பெருட்கள், தேங்காய் ஓடுகள் போன்றவற்றை
அப்புரப்படுத்த வேண்டும் காய்ச்சிய நீரையே பருக வேண்டும் தாங்கள்
இருக்கும் பகுதியினை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் போன்ற
மருத்துவக்குழுவின் மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

No comments