Disqus Shortname

தமிழக முதல்வர் வழங்கிய கறவை பசுமாடுகளால் தமிழ்நாடு முழுவதும் 1.25 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி அகிகரித்துள்ளது. அமைச்சர் டி.கே.எம்.சின்னைய்யா பேச்சு

உத்தரமேரூர் ஜீலை,12
தமிழகம் முழுவதும் ஏழைகளுக்கு கன்றுடன் கூடிய பசுக்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கியதால் ஒன்றே கால் லட்சம் லிட்டர் பால் உற்பத்தி அதிகரித்துள்ளதாக கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் டி.கே.எம்.சின்னைய்யா பேசினார். உத்தரமேரூர் கிழக்கு ஒன்றியம் புலிப்பாக்கம் கிராமத்தில் சனிக்கிழமையன்று விலையில்லா கன்றுடன் கூடிய 50 பசுக்களை பயனாளிகளுக்கு வழங்கி மேலும் அமைச்சர் பேசியது. கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பேன், மிக்சி, கிரைண்டர், கல்லூரி மாணவ மாணவியருக்கு மடிகணினி, அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி, 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவ மாணவியருக்கு இலவச பஸ் பாஸ், சீருடைகள், ஏழை எளிய விவசாயிகளுக்கு கறவை பசுமாடுகள், விலையில்லா வெள்ளாடுகள் தமிழகத்தில் வழங்குவது போல் 29மாநிலங்களில் இது போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டவில்லை மத்திய அரசிடம் விலை கொடுத்து அரிசி வாங்கி தமிழக மக்கள் ஒரு கோடியே, 85 லட்சம் பேருக்கு ரேஷன்கார்டு ஒன்றிற்கு 20 கிலோ அரிசி வழங்கி வருபவர் அம்மா. வேறு எந்த நாட்டு முதல்வராலும் வழங்கமுடியாது. பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்ட 17 ஆயிரம் கோடி ஒதுக்கி பணிகள் நடைபெற்று வருகிறது. 1069 கோடியில் கால்நடை மருத்துவத்திற்கு ஒதுக்கி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. உத்தரமேரூர் தொகுதிக்கு 3 மூன்று அரசு மருத்துவமனைகளை தமிழக முதல்வர் திறந்து வைத்துள்ளார். கல்வி உதவி தொகையையும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகள் நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து அளித்து வருபவர் தமிழக முதல்வர் மட்டும் தான் என்று பேசினார். இவ்விழாவில் பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை ரூ20 ஆயிரத்து250, திருமண உதவித்தொகை 26ஆயிரம், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, 87ஆயிரத்துஐநூறு ரூபாய்க்கான காசோலைகளை அமைச்சர் டி.கே.எம்..சின்னைய்யா வழங்கினார். அமைச்சர் இக்கூட்டத்திற்கு உத்தரமேரூர் சட்ட பேரவை உறுப்பினர் வாலாஜாபாத்பா.கணேசன் தலைமை தாங்கினார். சேர்மென் ஆர்.கமலக்கண்ணன் துணைச்சேர்மென் அ.ரவிசங்கர். முன்னிலை வகித்தனர். மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வி.ஆர்.அண்ணாமலை ஒன்றியகுழு உறுப்பினர் வெடி.ஆனந்தன், உட்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் உத்தரமேரூர் வட்டாட்சியர் ரவி நன்றி கூறினார்.

No comments