Disqus Shortname

பட்டாங்குளம் கிராமத்தில் தொலைக்காட்சி அறையில் இயங்கும் அங்கன்வாடி மையம்

உத்தரமேரூர் ஜீலை10
உத்தரமேரூர் அடுத்த தளவராம்பூண்டி பஞ்சாயத்திற்குட்பட்ட பட்டாங்குளம்
கிராமத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு சுமார் 20வது வருடங்களுக்கு முன்கட்டப்பட்ட தொலைக்காட்சி அறை
உள்ளது. அதில் கட்டபட்ட நாள் முதல் சுமார் 7 ஆண்டுகள் தொலைகாட்சி கிராம மக்களுக்கு ஒளிபரப்பப்பட்டது. அதன் பின் இந்த அறை பயன்படுத்தாமல் பூட்டி வைக்கப்பட்டது. அவ்வமயம் அங்கன்வாடி மையத்திற்கு கட்டிடம் தேவைப்படமையால் இந்த அறை தற்காலிகமாக அங்கன்வாடி மையம் செயல்படத் தெடங்கியது. 10 ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை இந்த அறையில் தான் மையம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள குழந்தைகள் சுமார் 22 குழந்தைகள் இங்கு
பயில்கின்றனர். இங்கு காலையில் குழந்தைகளுக்கு கீரை உருண்டை மதியம்
வாரத்தில் முட்டை அல்லது கடலை கொண்ட உணவுகள் வழங்கப்படுகின்றன. மேலும் கர்பிணிப் பெண்களுக்கு தடுப்பு ஊசி வளர்இளம் பெண்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. கர்பிணிப் பெண்களுக்காக வாரத்தில் புதன் தோறும் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெரும். இங்கு குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டுப்  பொருட்கள் சத்துமாவு சமையல் பொருட்கள் போன்ற அனைத்தும்
இந்த குறுகிய அறையில் தான் வைக்க வேண்டியுள்ளது. இங்கு குழந்தைகள்
அமர்ந்து கொள்ளகூட வசதி இல்லை. எனவே குழந்தைகள் வெளியில் அமர்ந்து பயிளும் அவலம் உள்ளது. மேலும் சமையல் அறை வசதி இல்லாததால் திறந்த வெளியில் சமையல் செய்து குழந்தைகளுக்கு அளித்து வருகின்றனர். கழிவறை வசதியும் கிடையாது. மேலும் கர்பிணிப் பெண்கள் மாதப் பரிசேதனைக்காக இங்கு நாட வேண்டியுள்ளதால் அவர்கள் இங்கு வர தயக்கம் காட்டுகின்றனர். எனவே குழந்தைகள் மற்றும் கர்பிணிப்பெண்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பட்டாங்குளம் கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய அங்கன்வாடி மையம் அமைத்து தர அப்பகுதி மக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments