Disqus Shortname

குடிநீர் தொட்டி சீரமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை


உத்தரமேரூர் ஜீலை, 24
உத்தரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட 4 வது வார்டில் கைலாசநாதர் கோவில்
தெருவில் திறந்த வெளிக் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றிலிருந்து சுமார் 4 வருடங்களுக்கு முன்பு தண்ணீர் பற்றாக்குறை காலத்தில் பொது மக்கள் தேவைக்காக கிணறு அருகே பிராஸ்டிக் டேங்க் அமைத்து கிணற்றில் இருந்து மின் மோட்டார் மூலம் டேங்கிற்கு தண்ணீர் நிறப்பி பயன்படுத்தி வந்தனர். இந்த கிணற்றில் இருந்து வரும் நீரினை அப்பகுதியில் உள்ள 40திற்கும் மேற்ப்பட்ட குடும்பங்களுக்கும் அருகில் உள்ள கைலாசநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது அந்த டேங்க் சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டும் கிணற்றின் மேல் மூடி இருந்த இரும்பு தடுப்பு மூடியிடினை உடைத்தும் கிணற்றில் உள்ள நீரினை அசுத்தம் செய்துள்ளனர். உத்தரமேரூரில் தற்போது நிலவி வரும் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டினை போக்கும் நோக்கத்தோடு இதனை சீரமைத்து தர அப்பகுதி  மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். இது குறித்து உத்தரமேரூர் செயல் அலுவலர் கே.இரவி கூறுகையில் அதனை சீரமைக்கும் பணி விரைவில் முடிப்பதாக கூறினார்.

No comments