Disqus Shortname

உத்தரமேரூர் ஒன்றியத்தில் 945 மடிகணினி வழங்கும் விழா.

உத்தரமேரூர் ஜீலை,08
உத்தரமேரூர் ஒன்றியத்தில் உள்ள பள்ளி மாணவ-மாணவியருக்கு 945 மடிகணினிகளை உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கினார். உத்தரமேரூர் ஒன்றியக்குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர் முன்னிலை வகித்தனர். உத்தரமேரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 168 மடிகணினிகளும், உத்தரமேரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 305 மடிகணினிகளும் மானாம்பதி அரசு மேல்நிலைப்பள்ளியில் 134 மடிகணினிகளும் பெருநகர் அரசு
மேல்நிலைப்பள்ளியில் 236 மடிகணினிகளும் களியாம்பூண்டி அரசு
மேல்நிலைப்பள்ளியில் 102 மடிகணினிகளும் வழங்கினார் விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமை தாங்கினர். ஊராட்சி மன்ற தலைவர்கள், பெற்றோர் ஆசிரியர்கழக தலைவர்கள் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments