Disqus Shortname

உத்தரமேரூரில் ஆனி மாத கருட சேவை உற்சவம்

உத்தரமேரூர் ஜீலை,09
உத்தரமேரூர் ஸ்ரீ சுந்தரவரதராஜ பெருமாள் கோயில் (ஆனி கருடன்) கருடசேவை உற்வசம் நேற்று நடைபெற்றது. பெரியாழ்வார் அவதரித்த சுவாதி நட்சத்திரத்தில் இந்த ஆனி கருடன் உற்சவம் நடைபெறுவது வழக்கம். ஆனி மாதம் நடைப்பெரும் கருடசேவை உற்சவத்தை முன்னிட்டு உத்தரமேரூர் ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பெரியாழ்வார் கருடவாகனத்தில் உள்ள பெருமாளுக்கு எதிரே பார்த்தார் போல் காட்சி அளித்து  முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவில் தர்மகர்த்தா ஆர்.சேஷாத்ரி விழாவிற்கான ஏற்பாடினை செய்திருந்தார்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.