Disqus Shortname

இளநகர் ஊராட்சியில் திமுக பொதுக்கூட்டம்

உத்தரமேரூர் மார்ச்17
 உத்தரமேரூர் அடுத்த இளநகர் ஊராட்சியில் திமுக வேட்பாளர் செல்வத்திற்கு  வாக்குசேகரிக்க பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. உத்தரமேரூர் ஒன்றிய செயலாளர் இரா.நாகன் தலைமை தாங்கினார். இளநகர் ஊராட்சி செயலாளர் பொன்.ஏழுமலை, துணை செயலாளர் வெங்கடேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் மா.ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் ஞானசேகரன் டி,கே. கோபாலகிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பெ.மணி, மற்றும் தலைமை கழகப் பேச்சாளர்கள் கந்திலி கரிகாலன், ஆலந்தூர் மலர்மன்னன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் முடிவில் நாராயணன் நன்றி கூறினார்.

No comments