Disqus Shortname

தி.மு.க நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுகம்

உத்தரமேரூர் மார்ச்,12
காஞ்சி நாடாளுமன்ற தி.மு.க வேட்பாளர் சிறுவேடல் ஜி.செல்வம்
உத்தரமேரூர் ஒன்றிய தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் அண்ணாதிடலில் புதன்கிழமையன்று நடந்தது. ஒன்றிய அவைத்தலைவர் ஏ.கே.சீத்தாராமன் தலைமை தாங்கினார். ஒன்றியதுணைசெயலாளர் டி.குமார், முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் கு.துரைவேல், முன்னிலை வகித்தனர். ஒன்றிய கழக செயலாளர் இரா. நாகன் வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவர் க.சுந்தர் தலைமை பொதுக்குழு உறுப்பினர் கெ.ஞானசேகரன்,  மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் மா.ஏழுமலை, காக்கநல்லூர் டி.கே.கோபாலகிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணி, உட்பட பலர் சிறப்புரையாற்றினார்கள். காஞ்சி நாடாளுமன்ற தி.மு.க வேட்பாளர் சிறுவேடல்ஜி.செல்வம் தன்னை அறிமுகப்படுத்தி உதயசூரியன் சின்னத்திற்க்கு வாக்கு சேகரித்தார்.

மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் பேசியது.



அ.தி.மு.க அரசு குழந்தைகளுக்கான சத்துணவு திட்டத்தில் வாரத்தில் 
5 நாட்களும் 5 வகைகளான உணவுகளும் முட்டைகளும் வழங்குவதாக 2.11.2012–ல் அறிக்கை வெளியிட்டது. அது தற்போது வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை இதேபோல் அ.தி.மு.க அரசின் அறிக்கையில் மட்டும் கூறப்படும் நலத்திட்டங்கள் எதுவும் செயல்படுத்துவதும் கிடையாது அ.தி.மு.க அரசின் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக கெட்டுவிட்டது எனவும் அ.தி.மு.கவினர்க்கே பாதுகாப்பு இல்லை காஞ்சி மாவட்டத்தில் மட்டும் அ.தி.மு.க நிர்வாகிகள் உட்பட 150 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் காஞ்சிபுரத்தில் கடந்த 3-ம் தேதி வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்க்கு வந்த முதல்வர் ஜெயலலிதா ஹெலிக்காப்டரில் வந்து காஞ்சிபுரம் அருகே உள்ள நத்தம்பேட்டையில் இறங்கி அண்ணா வீட்டைதாண்டி பேரூந்து நிலையத்திற்க்கு பிரச்சாரத்திற்கு வந்தார். அண்ணா உருவ சிலைக்கு மாலை அணிவிக்கவில்லை அண்ணா வீட்டிற்கு சென்று பார்வையிடவில்லை ஆனால் கட்சி பெயரில் மட்டும் அண்ணாவின் பெயர் குறிப்பிட்டுள்ளார். தி.மு.க சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சிறுவேடல் செல்வம் ஒழுக்கமானவர், அமைதியானவர் அனைவரிடத்திலும் அன்பாக பழககூடியவர் தி.மு.க ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளராகவும் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளராக இருந்து  தற்போது மாவட்ட ஆதிராவிட நல அமைப்பாளராக பணியாற்றிவருகிறார்.  இத்தேர்தல் தி.மு.க விற்க்கு சவாலான தேர்தல் இரவு பகல் பாராது உழைத்து வெற்றிபெற்று ஜெயலலிதாவை ஊரைவிட்டே அனுப்பவேண்டும் தமிழக முதல்வராக ம.தி.மு.க கோபால்சாமி, தே.மு.தி.க விஜயகாந்த் இராமதாஸ் மகன் அன்புமணி கனவுகண்டு கொண்டிருக்கின்றார்கள். கம்யூனிஸ்ட் கட்சி  யாரிடமும் கூட்டணி கிடையாது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க எந்த கட்சியும் முன்வரவில்லை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி எம்.பி.யான விஸ்வநாதன் உத்தரமேரூர் ஒன்றியத்தில் உள்ள தி.மு.கவினர் 14 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தோம். உத்தரமேரூர் ஒன்றியத்தில் மட்டும் 25 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் செல்வம் வெற்றி பெற செய்ய வேண்டும். தற்போது அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிடும் மரகதம்குமரவேலின் கணவர் குமரவேல் தையூரில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோவிலுக்கு சொந்தமான சுமார் 12 ஏக்கர் நிலத்தை அபகரித்து பிளாட்போட்டு விற்றதாகவும் அவர்கள் குடும்பத்தினர் பதவி  அதிகாரத்தை கொண்டு அப்புரூடு பெற்று தந்ததாகவும் இப்படிபட்ட நில மோசடி புகாரில் உள்ள குமரவேல் மனைவியை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். இவர் எப்படி வெற்றி பெற முடியும் கட்சி நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் கூறுகையில் ஒவ்வொரு வார்டில் உள்ள வாக்காளரின் பட்டியலை சரிபார்க்க வேண்டும். அவர்களிடத்திலேயே வாக்குகளை சேகரிக்க வேண்டும் தினந்தோறும் மாலை நேரங்களில் மக்களை சந்தித்து பெண்களும் தனியாக சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்கவேண்டும்   தனது வீட்டில் உதயசூரியன்  சுவர் விளம்பரம் செய்திட வேண்டும். வாக்களாளர் படிவத்தை சரிபார்க்க வேண்டும் தோழமை கட்சியினரை மதிக்க வேண்டும் நம்மிடம் தொண்டர்கள் பலம் மட்டும் தான் உள்ளது. இதனை கருத்தில் கொண்டும் நம் கட்சியினர் அரும்பாடுபட்டு செல்வத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் இதை வைத்து தான் ஜெயலிலதாவை நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும் 13 ஆண்டுகளாக  காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து 10 ஆண்டுகளில் ஒரகடத்தில் 4ஆயிரம் கோடி செலவில் ரெனால்டு கார் தொழிற்சாலையும் ஸ்ரீ பெரும்புதூரில் 1500 கோடி முதலீட்டில் நோக்கியா செல்போன் கம்பெனியும் சுங்குவார் சத்திரத்தில் 450 கோடி மதிப்பில்  சேம்சென், செல்போன் தொழிற்சாலையும், 135 கோடி முதலீட்டில் மோட்ரோலா செல்போன் ஆலையும் ஒரகடத்தில் 75 கோடி முதலீட்டில் கோமாட்சி ஆலையும் ஸ்ரீ பெரும்புதூரில் 250 கோடி மதிப்பில் பெல் கம்யூட்டர் ஆலையும் ஸ்ரீ பெரும்புதூரில் 1000 கோடி மதிப்பில் அமெரிக்க நாட்டின் செமிகண்டெக்டர் ஆலையும் கலைஞர் மு.கருணாநிதி ஏற்பாட்டில் திறக்கப்பட்டு பலஆயிரகணக்கான மக்கள் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள் அது கலைஞரின் சாதனை இல்லையா என்றும் உத்தரமேரூரில் 140 வாக்கு சாவடியில் உத்தரமேரூர் ஒன்றியத்தில் 22 ஆயிரம் பேரும் இளைஞர்கள் 12 ஆயிரம் பேரும் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து அனைத்து நிர்வாகிகளும் பாராட்டுகிறேன் என்று கூறினார். மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன். முடிவில் பேரூர் கழக செயலாளர் என்.எஸ்.பாரிவள்ளல் நன்றி கூறினார்.  

No comments