Disqus Shortname

வறண்ட நிலையில் வைரமேகன் தடாகம் ஏரி

உத்தரமேரூர் மார்ச்,22
தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான உத்தரமேரூர் வைரமேகன் தடாக ஏரியாகும்.  இந்த ஏரி சுமார் 3000 ஏக்கர் பரப்பளவு கொண்டது, இந்த ஏரியில் மூலம் சுமார் 18-ற்கு மேற்ப்பட்ட கிராங்களில் உள்ள 5462 ஏக்கர் நிலங்களில் கரும்பு, நெல்,அதிகப்படியாக பயிரிடப்பட்டு வருகிறது. ஏரி முழுவதும் நீர் நிரம்பினால் முப்போகம் நெற்பயிர் பயிரிடப்படும் ஆனால் தற்போது மழைபொழியாத காரணத்தால் ஏரி வறண்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. இதுமாதிரயின காலக்கட்டங்களில் விவசாயிகளின் உற்ற தோழனாகவும் விவசாயிகளின் நடமாடும் வங்கி என்று அழைக்கப்படுகின்ற ஆடு, மாடுகளுக்கு உணவான புல் வகைகள் இல்லாமல் அனைத்து நிலங்களும் காய்ந்து போய் வறண்டு உள்ளது. 
 குறித்து விவசாயி சந்திரன் கூறுகையில் உத்தரமேரூர் ஏரி ஒரு கால கட்டத்தில் முப்போகம் பயிர்இடப்படும் ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக சரிவர மழை பொழியாத காரணத்தால் ஏரி நீர் நிரம்பவில்லை ஆடு, மாடுகள் குடிப்பதற்க்கு கூட நீரின்றி அவதியுறும் அவல நிலை உருவாகியுள்ளது.   எனவே நாங்கள் பயிர் வைக்க வழியில்லாமல் சிரமப்படுகிறோம். எங்கள் பகுதி ஏரியை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கிராமத்தில் உள்ள ஆடு,மாடுகளை உணவுக்காக ஏரியில் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வோம் ஆனால் ஏரியில் தற்போது முற்றிலுமாக  வறண்டு போய்விட்டதால் ஆடு, மாடுகள் கூட மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல முடியாமல் நிலை உள்ளது. இதனால் ஆடு,மாடுகளை அடிமாட்டு விலைக்கு விற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.


விவசாயி பெருமாள் கூறுகையில் எனக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. எனது விவசாய நிலத்தில் உள்ள  கிணற்றில் மழை காலங்கிளில் தண்ணீர் எப்போதும் இருந்துக்கொண்டிருக்கும் தற்போது மழை பொழியாத காரணத்தால் தண்ணீர் இல்லாமல் கிணறு வறண்டு விட்டது. தண்ணீர் தேவைக்காக ஆழப்படுத்தினாலும் தண்ணீர் குறைவாகவே கிடைக்கிறது, அந்த நீரை பயன்படுத்தி விவசாய  பயிர்யிடுவதற்க்கு போது மான நீர் வரவில்லை அத்துடன் பாசனநீருக்கு செல்லும் கால்வாய்கள் சீரமைக்கப்படவில்லை இந்த கால்வாய்களை சீர் அமைத்தால் விவசாயிகளுக்கு ஏதுவாக இருக்கும் இதனால் மழைக்காலங்களில் விவசாய நில பயிர்களுக்கு நீர் செல்வது கடினமானதாக உள்ளது, என்றும் இதனால் விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களை விற்றுவிடுகின்றனர். இதனால் விவசாயம் என்பது  கேள்விக்குறியாக உள்ளது. கடந்த ஆண்டு ஏரிகரைகளை பலப்படுத்தவும் ஏரியின் கண்மாய், மதகுகளை சீரமைக்க ரூ.2 கோடியை தமிழக அரசு நிதி அளித்தது.அந்த நிதியை பயன்படுத்தி அனைத்து வேலைகளையும் துரிதமாக முடிக்கப்பட்டு பணிகள் சரிவர செய்யவில்லை இதனால் மழைக்காலங்களில் ஏரிக்கரையானது உடையும் அபாயம் நிலைக்கு உள்ளது.

No comments