Disqus Shortname

உத்தரமேரூரில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொது மக்கள் அவதி

உத்தரமேரூர் மார்ச் 19
உத்தரமேரூர் நகரில் பல்வேறு பகுதிகளில் கடந்த 6 நாட்களாக காலை 10 மணிக்கு துண்டிக்கப்படும் மின்சாரம் மாலை 5 மணிவரை துண்டிக்கப்படுகிறது. சுமார் 7 மணி நேரம் அதாவது பகல் முழுவதும் துண்டிக்கப்படும் மின்சாரத்தால் வர்த்தக நிறுவனங்கள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.
எஸ்.பி.கோவில் தெரு, மிஷின் ஸ்கூல் தெரு, அய்யாதுரை நாயுடுத் தெரு, சாத்தாணி தெரு மற்றும் பல்வேறு இடங்களில் நாள் ஒன்றுக்கு 7 அல்லது 8 மணி நேரம் முழுவதுமாக மின்சாரம் தடைபடுகிறது இதுமட்டுமின்றி உத்தரமேரூர் நகர்புறப் மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது, அப்படியே மின்சாரம் வந்தாலும் குறைந்த மின்னழுத்த மின்சாரமாக வருகிறது இதனால் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் பழுதடைந்து விடுகிறது.
இது குறித்து மின்வாரிய அலுவலரை தொடர்பு கொண்டு கேட்ட போது தற்போது உள்ள டிரான்ஸ்பார்மரின் அளவு அதிகரிக்கும் பணிக்காக மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. என்றார். எனினும் மாத மாதம் பராமரிப்பு பணிக்காக துண்டிக்கப்படும் நேரங்களில் இந்தப் பணியினை செய்யாமல் மற்ற நாட்களில் செய்வதால் பெரிதும் பதிக்கப்படுவதாக பொது மக்கள் குற்றம் சாற்றுகின்றனர். தற்போது வெய்யிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மின்சாரம் இல்லாமல் இருப்பது மிகவும் கடினமாக உள்ளதாக கூறுகின்றனர்.

No comments