Disqus Shortname

அரும்புலியூரியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் : கலெக்டர் ஆய்வு

உத்திரமேரூர் ,23-ஏப்.2020
-

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே அரும்புலியூரியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலமாக 36 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. தற்போது வரை 21898 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மே 30ம் தேதி வரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யப்படும்.

மேலும் கடந்தாண்டு காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டமாக இருக்கும்போது 36 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டதும் தற்போது காஞ்சீபுரம் மாவட்டத்தில் மட்டும் 36 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுவதும் விவசாயிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இதேபோல் கடந்த ஆண்டு கொள்முதலான 24728 மெட்ரிக் டன்னை காஞ்சீபுரம் மாவட்டம் மட்டுமே தற்போது நெருங்கி விட்டதாகவும் இன்னும் 12048 மெட்ரிக் டன்னுக்கு மேல் கொள்முதல் செய்ய திட்டமிட் டுள்ளதாகவும் இதனால் 50 சதவீதம் கூடுதலாகவே காஞ்சீபுரம் மாவட்டத்தில் மட்டும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாய கொள்முதல் நிலையங்களில் தினசரி 800 மூட்டைகள் வாங்கி கொள்ளவும் கொள்முதல் நிலையங்களுக்கு தேவையான சாக்கு பைகள் கிடைக்கவும் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விவசாய கொள்முதலுக்கு தேவை யான பணிகள் குறித்து மூன்று தினத்திற்கு ஒருமுறை அதிகாரிகளின் ஆலோசனைபடி அந்தந்த கொள்முதல் நிலையங்களுக்கு தேவையான சாக்குப் பைகள் தங்குதடையின்றி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, நுகர்பொருள் வாணிப கழக மண்டல முதுநிலை மேலாளர் வி.செந்தில்குமார், தரக்கட்டுப்பாட்டு மேலாளர் மகேஸ்வரி, துணை மண்டல மேலாளர் அருள்வனிதா உள்பட பலர் உடனிருந்தனர்.

No comments