Disqus Shortname

உத்திரமேரூரில் டெல்லிக்கு சென்று வந்தவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை

உத்திரமேரூர் 09/04/2020
டெல்லியில் கடந்த மாதம் (தப்லீக் ஜமாத்) என்ற அமைப்பின் சார்பில் நடந்த மாநாட்டு நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர். இதில் மாநாடு முடிந்து தமிழகம் திரும்பிய பலருக்கு கொரோனா தொற்று உறுதியானது இதனால் மாநாட்டில் கலந்து கொண்டவர்களை மத்திய மாநில அரசு தானே முன் வந்து பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதற்காக சுகாதாரத்துறையினர் சம்மந்தபட்டவர்களைத் தேடி அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தி கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட கஸ்பா முனுசாமி நாயுடு தெருவை சேர்ந்த இஸ்லாமியர் (முகமதி இஸ்மாயில்) ஒருவர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டதாக வெளியான தகவலை அடுத்து சுகாதாரத் துறையினர் அங்கு சென்று அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் டெல்லி நிகழ்ச்சிக்கு சென்று வந்தவர் வீட்டில் சுகாதாரத்துறையினர் ஸ்டிக்கர் ஒட்டி வீட்டிலிருந்து யாரும் வெளியில் வர கூடாது என உறவினர்களுக்கு அறிவுறுத்தினர்.மேலும் கஸ்பாமுனுசாமிநாயுடுதெரு இருபுறமும் அடைக்கப்பட்டுஅதைச்சுற்றியுள்ள தெருக்களில் பேரூராட்சி சார்பில் முழுவீச்சில் கிருமி நாசினிமருந்து தெளிக்கப்பட்டு தூய்மை பணியினை தீவிரப்படுத்தியுள்ளனர். சம்மந்தபட்டஇடத்தில் நடக்கும் சுகாதார பணிகளை சார் ஆட்சியர் சரவணன்பார்வையிட்டார். மேலும் டெல்லி சென்று வந்தவர்கள் யார் யாரென கணக்கெடுப்புப் பணிதீவிரமாக நடைபெற்று வருகிறது இதனால் உத்திரமேரூரில் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

No comments