Disqus Shortname

உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட 10 கிராமங்களில் 2500 ஏழை, எளிய குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் விநியோகம்




உத்திரமேரூர் ஏப்ரல் 25
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சுற்றியுள்ள பகுதிகளில் ஊரடங்கின் காரணமாக பொது மக்களின் வாழ்வாதாரத்தினைக் கருத்தில் கொண்டு அதிமுக சார்பில் தொடர்ந்து பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக உத்திரமேரூர் அடுத்த குப்பையநல்லூர், மானாம்பதி, ஆர்.என்.கண்டிகை, அனுமந்தண்டலம், களியாம்பூண்டி, சிலாம்பாக்கம், வெங்காரம், ஒழுகரை, கருவேப்பம்பூண்டி, மடம் ஆகிய பகுதிகளில் உள்ள 2500 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளரும், மாவட்ட கூட்டுறவு சங்கத் தலைவருமான வாலாஜாபாத் கணேசன் பொது மக்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக 15 கிலோ அரிசி, பருப்பு, சமையல் எண்ணை, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வழங்கி அரசு கூறும் வழிமுறைகளை கடைபிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் பொது மக்கள் சமூக இடைவெளியினை கடைபிடித்து நிவாரணப் பொருட்களை வாங்கிச்சென்றனர். நிகழ்வின் போது ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ்பாபு, தங்கபஞ்சாட்சரம், தருமன், இளைஞரணி துரைபாபு, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மானாம்பதி வில்வபதி, விஜயகுமார், நிர்வாகிகள் ராஜாமணி, .பி.சத்திரம் பெருமாள், தமிழ்செல்வன் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments