Disqus Shortname

உத்திரமேரூர் அரசு மருத்துவமனை பஸ் நிலையங்களில் அரசு அதிகாரிகள் திடீர் ஆய்வு

உத்திரமேரூர் 20/04/2020
உத்திரமேரூரில் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் விதமாக பேரூராட்சி நிர்வாகம் பேரூராட்சி முழுவதும் தூய்மை பணிகளை மேற்கொண்டு கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு நீட்டித்ததைத் தொடர்ந்து உத்திரமேரூரில் காய்கறி, மளிகைக்கடைகள், மருந்தகம் போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டும் 1 மணி வரை திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உத்திரமேரூர் மருத்துவமனை பஸ் நிலையம் பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நேற்று மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் ராஜேந்திரன், தனித்துணை ஆட்சியர் தங்கவேலு ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டனர். ஆய்வின் போது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் நோயாளிகள் சமூக இடைவெளியினை கடைபிடிக்க அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து பஜார் வீதியில் திறக்கப்பட்டுள்ள காய்கறிக்கடைகள் மருந்தகங்களில் பார்வையிட்டு இடைவெளி விட்டு பொருட்களை வாங்கவும் முககவசம் கட்டாயம் அணிய வலியுறுத்தினர். நிகழ்வின் போது தனி வட்டாட்சியர் லோகநாதன், பேரூராட்சி செயல் அலுவலர் லதா உட்பட பலர் உடனிருந்தனர்.

No comments