Disqus Shortname

உத்திரமேரூரில் அதிமுக சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் 856 குடும்பத்தினருக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் விநியோகம்

உத்திரமேரூர்20/03/2020
தமிழகத்தில் கொரோனா பாதிபதிலிருந்து மக்களை பாதுக்காக்க அரசு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணை கோதுமை உள்ளிட்ட பொருடகள் இலவசமாகவும் மற்றும் நிவாரணத் தொகையாக ரூ. 1000 பணமும் ரேஷன் கடை மூலம் வழங்கப்பட்டது. இந்நிலையில் அதிமுகவினர் ஏழை, எளிய மக்களுக்கு தொடர்ந்து நிவாரணப் உதவிகள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் அதிமுக சார்பில் இருளர் பழங்குடியின குடும்பங்கள் மற்றும் நறிகுறவர்கள் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து இன்று உத்திரமேரூரில் கூலித் தொழிலாளர்கள், ரிக் ஷா தொழிலாளி, ஆட்டோ ஓட்டுநர்கள், சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் என அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்கள் 856 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு எண்ணை காய்கறி உள்ளிட்டவைகள் நிவாரண உதவிகளாக காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் கணேசன் வழங்கினார். மேலும் அரசு கூறும் வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினார். நிகழ்வின் போது ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ்பாபு, தருமன், தங்கபஞ்சாட்சரம், இளைஞரணி நிர்வாகி துரைபாபு, நிர்வாகிகள் வேலு, பூண்தண்டலம் ராஜேந்திரன், அ.பி.சத்திரம் பெருமாள், புருஷோத்தமன், கம்மாளம்பூண்டி பெருமாள் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

No comments