Disqus Shortname

உத்திரமேரூர் நான்கு வழித்தடங்களும் மூடப்பட்டது

உத்திரமேரூர் 21/04/2020 : காஞ்சிபுரம் நகராட்சியை தொடர்ந்து, உத்திரமேரூர் பேரூராட்சியிலும், பொதுமக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டு, அவர்களுக்கு, மூன்று நிற அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன.இந்நிலையில்
உத்திரமேரூர் நான்கு வழித்தடங்களும் மூடப்பட்டது. இனி வெளியூர் மக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே உள்
ளே அனுமதிக்கப்படுவர்

காஞ்சிபுரம் நகராட்சியில், கொரோனா வைரஸ் காரணமாக, நான்கு பேர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தனர்.இதன் காரணமாக,  உத்திரமேரூர்  பேரூராட்சியை, 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, பொதுமக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டது. வார்டு வாரியாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வீட்டுக்கும், அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டன. இந்த அட்டையை வைத்து, வாரம் இருமுறை மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறது.

இதே நடைமுறை, காஞ்சிபுரம் மாவட்ட பேரூராட்சிகளிலும் நடைமுறைக்கு வருவதாக, கலெக்டர், பொன்னையா தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர், மாங்காடு, வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய ஐந்து பேரூராட்சிகள் உள்ளன.ஒவ்வொரு பேரூராட்சிகளிலும், மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, மூன்று நிற அனுமதி அட்டைகள் வழங்கப்பட உள்ளன.

அத்தியாவசியப் பொருள்
வாரம் இருமுறை மட்டுமே வீட்டில் இருந்து பொதுமக்கள் வெளியே வந்து அத்தியாவசியப் பொருட்களை வாங்கி செல்ல அனுமதிக்கப்படுவர்.பொதுமக்கள், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி அட்டைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள, 'வாட்ஸ் ஆப்' எண்ணுக்கு, அவசர காலங்களில் தொடர்பு கொள்ளலாம்.தங்கள் பகுதியில், அனைத்து வகையான அத்தியாவசிய பொருட்களும் கிடைக்கும் வகையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என, கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்

No comments