Disqus Shortname

உத்திரமேரூரில் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்.

உத்திரமேரூர்  ஜீன்.28  :
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பஜார் வீதியில் நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான சாலை ஒரங்களில் 500க்கும் மேற்பட்டுள்ள வியாபாரிகள் டீக்கடைகள், துணிக்கடைகள் , மீன், கோழிக் கடைகள், பெட்டிக்கடைகள், இட்லி கடைகள், கடைகள் வைத்து ஆக்கிரப்பு செய்திருந்தனர், மேலும் உத்தரமேரூரில் பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வந்தவாசி நாளொன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேரூந்துகள் வந்து செல்கின்றன. போக்கு வரத்து சாலையை வியாபாரிகள் கடைகள் வைத்து ஆக்கிரப்பு செய்துள்ளதால்  இதனால் பேருந்துகள் செல்ல நெரிசலாகவும்  போக்குவரத்திற்கு  இடையூறாகவும் இருந்தது. இதையொட்டி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று நெடுசாலைதுறைக்கு  பொதுமக்கள் வெகு நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுசாலைதுறை சார்பில் முடிவு செய்யப்பட்டது.போக்குவரத்து சாலையை அகலப்படுத்த நெடுச்சாலை துறை சார்பில்  கடந்த 20ம் தேதி வியாபாரிகளுக்கு ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் அனுப்பட்டது இந்நிலையில் செவ்வாய்கிழமையன்று உத்தரமேரூரில் உள்ள பஜார் வீதியில் உள்ள அனைத்து கடைகளையும் , நெடுஞ்சாலைத்துறையினர், தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரிகள், நில அளவலர்கள், ஆகியோரது மேற்பார்வையில் ஆக்கிரமிப்புகள் ஜே,சி.பி மூலம் அகற்றப்பட்டன.இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றம் போது உத்தரமேரூர் காவல் துறையினர் உடனிருந்தனர். வியாபாரிகளிடையே இந்த ஆக்கிரமிப்பு கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments