Disqus Shortname

திரெளபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

உத்திரமேரூர் மே,26

உத்திரமேரூரில் ஸ்ரீதிரௌபதையம்மன் ஆலையத்தில் அக்னி வசந்த விழா ஜீன் 2ம் தேதி கொடி யேற்றத்துடன் துவங்கியது. துவங்கிய நாள் முதல் தினமும் மகாபாரத  சொற்பொழிவு, ராஜசூய யாகம், பகடை துகில், அர்ச்சுணன் தபசு, விராடபருவம், கிருஷ்ணன் தூது, அரவான் கள பலி, கர்ண மோட்சம் போன்ற நிகழ்ச்சிகள்  தொடர்ந்து நடைபெற்றன. விழாவில் நேற்று காலையில் துரியோதனன் படுகளம்  நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான பிரம்மாண்டாமான துரியோதனன் போன்ற மண்ணிலான  சிலை உருவம் அமைக்கப்பட்டது. இதில் பீமன் வேடமிட்டவர் துடையில் அடிக்க
துரியோதணன் இறந்த காட்சியினை நாடக குழுவினர் சிறப்பாக செய்தனர். இந்த  துரியோதன படுகள நிகழ்ச்சியினை காண உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள  கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட  பக்தர்களுக்கு கோவில் வளாகத்தில் அன்னதானம் அளிக்கப்பட்டது. விழாவிற்கான  ஏற்பாடுகளை விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். மாலை விழாவிற்காக  விரதமிருந்த பக்தர்கள் கோவிலில் பொங்களிட்டும், தீக்குண்டத்தில்  தீமித்தும் தங்களது நேத்திக்கடன்களை நிறைவேற்றினர். இரவு  ஸ்ரீதிரௌபதையம்மன், பஞ்சபான்டவர்களுடன் கிருஷ்ணன் சுவாமியுடன்  திருவிதியுலா வந்தது. பக்தர்கள் தீபாதாரனை காட்டி சுவாமியை வழிபட்டனர். இரவு தெருக்கூத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

No comments