Disqus Shortname

உத்திரமேரூரில் கருணாநிதி 93வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

உத்திரமேரூர் ஜீன் 01
திமுக தலைவர் கருணாநிதியின் 93 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று திமுக தொண்டர்கள் கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் 2000 பேர்க்கு
பிரியாணி வழங்கியும் வெகு விமர்சையாக கொண்டாடினர்
உத்திரமேரூர் பேரூந்து நிலையத்தில் உத்திரமேரூர் திமுக ஒன்றிய கழகத்தின் சார்பில் 93 கிலோ எடையுள்ள மெகா கேக்கினை வெட்டியும் மதியம்  2000 எழை  எளிய மக்களுக்கு பிரியாணி வழங்கியும் பட்டாசுகள்
வெடித்தும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்
கெ.ஞானசேகரன் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் என்.எஸ்.பாரிவள்ளல், தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் மா.ஏழுமலை, ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் சுப்பைய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர்
சட்ட மன்ற உறுப்பினறுமான க.சுந்தர் கலந்துக்கொண்டு 93 கிலோ எடையுள்ள மெகா கேக்கினை வெட்டியும், எழை, எளிய மக்களுக்கு பிரியாணி வழங்கி  சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சாலவாக்கம் ஒன்றிய செயலாளர்  குமார், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் டி.கே.கோபாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி வெ.கோவிந்தராஜ், ஒன்றிய பிரதிநிதி கார்த்திக், உட்பட ஏராளமான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments