Disqus Shortname

உத்திரமேரூரில் மக்கள் நலக்கூட்டியக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்திரமேரூர் டிச, 23

உத்திரமேரூர் ஒன்றியத்தை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கக் கோரி உத்திரமேரூர் தாலுக்கா அலுவலகம் முன்பு நேற்று மக்கள்
நலக்கூட்டியக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் மதிமுக ஒன்றிய செயலாளர் மணிவண்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் மல்லிமாறன், சி.பி.எம் வட்ட செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மதிமுக வளையாபதி, சி.பி.எம். சங்கர், வி.சி.க. சூ.க.விடுதலைச்செழியன், மக்கள் செய்தித் தொடர்பாளர் தி.வ.எழிலரசு, மதிமுக மாவட்ட துணை செயலாளர் கருணாகரன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். உரையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர் ஒன்றியத்தை வெள்ளம் பாதிக்கப்பட்ட ஒன்றியமாக அறிவிக்க வேண்டும், வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடாமல் பாதிப்பில்லை
என்று கூறிய தாசில்தார், வி.ஏ.ஓ உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தற்போது வரை வழங்கிய நிவாரணத் தொதையை பல்வேறு காரணங்களை காட்டி லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும், தற்போது வழங்கப்படும் நிவாரணத் தொகையை கூடுதலாக வழங்க வேண்டும், இது வரை
கொடுத்த நிவாரத் தொகையில் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கியதை மீண்டும் பெற்றுத் தர வேண்டும், இனி வழங்கும் நிவாரணத் தொகையினை வங்கி மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும். உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

No comments