Disqus Shortname

உத்திரமேரூர்-செய்யாறு இடையே தரைப்பாலம் உடைந்தது பஸ் இல்லாமல் கிராம மக்கள் அவதி

உத்திரமேரூர் டிச9
உத்திரமேரூரிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் செய்யாற்றின் இடையே தரை பாலம் உள்ளது, இப்பாலமானது சுமார் 1945 ல் ஆங்கிலேயா்களால்
கட்டப்பட்டது. உத்திரமேரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள்
காஞ்சிபுரம் செல்ல இப்பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். அண்மையில் பெய்த கன மழையில் இப்பாலம் உடைந்தது, இதனால் உத்தரமேரூர் காஞ்சிபுரம் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.  இந்நிலையில் மாகரல், ஆர்ப்பாக்கம், கலக்காடூர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களுக்காக காஞ்சிபுரத்திலிருந்து செய்யாற்று பாலம் தனி பேரூந்து  இயக்கப்படுகிறது. ஆனால் உத்திரமேரூரில் இருந்து வெங்கச்சேரி வரை பேருந்து இயக்கப்படவில்லை. இதனால் வெங்கசேரியில் கடம்பரகோவில், புலிவாய்,
ஆதவபாக்கம், கருவேப்பம்பூண்டி, திருப்புலிவனம், மருதம், ஆனைப்பள்ளம் என  50த்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கும்,
நிவாரணம் கோரியும் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும்
உத்திரமேரூக்கு செல்ல  முடியாமல் பெரிதும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
எனவே உத்திரமேரூரிலிருந்து வெங்கச்சேரி வரையில் பேரூந்து இயக்க பொது   மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments