Disqus Shortname

உத்திரமேரூர் டான்சுப்பேட்டை தெருவில் தரைப்பாலம் சீரமைக்க கோரிக்கை

உத்திரமேரூர்,டிச 10  : உத்திரமேரூர் பேரூராட்சி  8

மேலும் இந்த சாலையில் கால்வாய் தரைப்பாலம் ஒன்று உள்ளது.  இத்தரைப்பாலம் வெகுநாட்களாக சிதிலமடைந்து காணப்பட்டது. அண்மையில் பெய்த மழை வெள்ளம்  அரித்து   சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன.  இதனால் பாலத்தை கடக்க மக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். வாகனங்கள் செல்லும் போது உடையும் அபாயம் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே செல்கின்றனர். இரவு நேரங்களில் இந்தபாலத்தை கடப்போர்  கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே, பழுதடைந்த  தரைபாலத்தையும், கால்வாய்களையும்  சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
வது வார்டுக்குட்பட்டது டான்சுபேட்டை தெரு. இங்கு  50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது.  ஆனால்  மழைநீர் மற்றும் கழிவு நீர்கால்வாய்கள் சரிவர அமைக்கப்படவில்லை.  தற்போது இந்த கால்வாய்கள்சிதிலமடைந்து தூர்ந்து போய் காணப்படுகிறது.  இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர்  சாலைகளில் செல்கின்றது.இந்நிலையில் அண்மையில் பெய்த  மழைநீருடன் கழிவு நீரும் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.   ஆங்காங்கே  ஏற்பட்டுள்ள  பள்ளங்களில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.  கொசுக்கள் பெருமளவு உற்பத்தியாகியுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் தொற்று நோய்பரவும் அபாயம்  அதிகரித்துள்ளது.

No comments