Disqus Shortname

உத்திரமேரூருக்கு வெள்ள நிவாரணம் கோரி 28ம் தேதி பட்டை நாமமிட்டு பட்டினி போராட்டம் : வேளாண்மை விழிப்புணர்வு சங்கம் அறிவிப்பு


உத்திரமேரூர் டிச 22.

உத்திரமேரூரில் மாவட்ட இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு சங்கத்தின்
செயற்குழு கூட்டம்  நடந்தது. கூட்டத்தில் மாவட்ட தலைவர் சோழனூர்
மா.ஏழுமலை தலைமை தாங்கினார் மாவட்ட துணைச் செயலாளர்கள் மருதம்
மாயக்கிருஷ்ணன், மதூர் பொன்சண்முகம், முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் மு.பரசுராமன் அனைவரையும் வரவேற்றார் கூட்டத்தில் அண்மையில் பெய்த கன மழை காரணமாக காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளுர், கடலூர் உள்ளிட்ட  மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிர் சேதம், பொருள் சேதம், விவசாயம் என்று பேரழிவை ஏற்படுத்தியது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில்  உத்திரமேரூர் தாலுக்கா உட்பட 12 தாலுக்காக்களும் கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அண்மையில் காஞ்சிபுரத்தில் நடந்த  மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற கூட்டத்தில் உத்திரமேரூர் தாலுக்காவை தவிர மற்ற  தாலுக்கா அனைத்தும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள 73ஊராட்சிகளிலும் நீரால் சூழப்பட்டும்
மழை வெள்ளம் காரணமாக உத்திரமேரூர் ஒன்றியத்தில் மட்டும் 6 பேர்
இறந்துள்ளனா். சுமார் 25 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக விவசாய நிலங்கள்
பாதிக்கப்பட்டும் 1000க்கு மேற்பட்ட ஆடு, மாடுகள் இறந்துள்ளன.

பெருநகர், அழிசூர், உத்திரமேரூர், திருப்புலிவனம், மாம்பாக்கம், மதூர்,
உள்ளிட்ட பகுதிகளில் ஏரி நிரம்பி வெளியேரிய உபரி நீரால் ஏற்பட்ட
வெள்ளப்பெருக்கில் மேனல்லூர், காட்டுப்பாக்கம், கல்யாணமேடு,
அரசாணிமங்கலம், அத்தியூர், மேல்துாளி, புலியூர், காவனூர்புதுச்சேரி,
மருதம், மருத்துவான்பாடி போன்ற 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரால்
சூழ்ந்து கிராம மக்கள் ஆங்காங்கே பள்ளிகள் மற்றும் பல்வேறு இடங்களில்
முகாமிட்டு நிவாரணங்கள் வழங்கப்பட்டது. இதேபோல் இந்த வெள்ளப் பெருக்கால்
பெருங்கோழி கட்டியாம்பந்தல் உள்பட 10 கிராமங்கள் சாலைகள் பழுதாகி
துண்டிக்கப்பட்டது, இது மட்டுமின்றி வெங்கச்சேரியில் செய்யாற்று பாலம்
உடைப்பு ஏற்பட்டு சுமார் 25 கிராமங்கள் தீவு போல மாறியது, ஆற்று நீர்
புகுந்து சாத்தனஞ்சேரி குருமஞசேரி பாலன் நகர், காவூர், காவியதண்டலம்,
களியப்பேட்டை போன்ற 10 கிராமங்கள் வெள்ளத்தில் சூழ்ந்தன. இப்படியான
பாதிப்புகள் ஏற்பட்டு தாலுக்கா முழுவதும் வருமை கோட்டிற்கு கீழ் வாழும்
மக்கள் உணவின்றி உபரி நீரை வெளியேற்றினார்கள், மிகப்பெரிய பேரழிவை
சந்தித்த உத்திரமேரூர் தாலுக்காவை மழை பாதித்த பகுதியாக அறிவிக்காதது
மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே தமிழக அரசும், மாவட்ட ஆட்சியரும் மழை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்திரமேரூர் தாலுக்காவை பாதிக்கப்பட்ட
பகுதியாக அறிவித்து உரிய நிவாரணங்கள் வழங்கிட வேண்டும், இதற்காக வரும் 28  ஆம் தேதியன்று பட்டை, நாமமிட்டு பட்டினிப்போராட்டம் நடத்தப் போவதாகவும்  தீர்மானம் நிரைவேற்றப்பட்டது.

No comments