Disqus Shortname

பீட்டா அமைப்பு வரம்பு மீறி செயல்படுவதால் அதற்கு முற்றுபுள்ளி வைக்க அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் துணைநிற்க வேண்டும் - ஜிகே.வாசன் கோரிக்கை

உத்திரமேரூர்  Jan 22:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூந்து நிலையம் அருகே
ஜல்லிகட்டுக்காக இளைஞர்கள் நடத்திய அறவழி போராட்டத்திற்க்கு ஆதரவு
தெரிவித்து தமிழ் மாநில காங்கிரஸின் தெற்க்கு மாவட்ட தலைவர் மலையூர்
புருஷோத்தம்மன் தலைமையில் பொது கூட்டம் நடைபெற்றது. இந்த பொது
கூட்டத்தில் தமாக வின் மாநில தலைவர் ஜிகே.வாசன் மற்றும் மாநில
துணைத்தலைவர் ஞானதேசிகன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து
கொண்டனர்.இதில் பங்கேற்று கொண்டு ஞானதேசிகன் பேசும் போது ஜல்லிகட்டு  தொடர்பான  மத்திய அரசின் சட்டத்தை மாநில அரசு மாற்றி, நேற்று இயற்றிய  அவசர சட்டத்தை வலுபெற செய்து ஜல்லிகட்டுக்கு தடை ஏற்படுத்தாதவாறு நிரந்தர  சட்டம் கொண்டுவரப்படும் என்றார். ஜிகே.வாசன் பேசும் போது ,  ஜல்லிகட்டுக்குண்டான தடையை நீக்க அவசர சட்டத்தை கொண்டு வந்தது  மட்டுமில்லாமல் மக்களின் சந்தேகத்தை தீர்க்க வேண்டியது மாநில அரசின் கடமை  என்றார். செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது , தமிழ்நாட்டின்  பண்பாடு , கலாச்சாரம் இவைகளுக்கு பிரச்சனை ஏற்பட்டதால்தான் இளைஞர்கள்,  மாணவர்கள், மக்கள், ஒருங்கிணைந்து அறவழி போராட்டம் நடத்தினார்கள்  என்றும்  இது மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் பீட்டா  அமைப்பு வரம்பு மீறி செயல்படுவதால் அதற்கு முற்றுபுள்ளி வைக்க அனைத்து  கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் துணைநின்று அதை வளர விடக்கூடாது என்றும் கூறினார்

No comments